ஐடிஐ/பிளஸ் 2 படித்தவர்களுக்கு வாய்ப்பு
வயது: 19.08.2026 தேதியின்படி 15 முதல் 24க்குள். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஏதாவதொன்றில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மெடிக்கல் லேப் டெக்னீசியன் (பேத்தாலஜி/ரேடியாலஜி) பிரிவுக்கு உயிரியல் பாடப்பிரிவுகளுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சியளிக்கப்படும். பயிற்சியின் போது ரயில்வே விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வுக்கு வரும் போது அனைத்து அசல் சான்றுகளையும் கொண்டு வர வேண்டும். மெடிக்கல் லேப் டெக்னீசியன் பிரிவுக்கு பிளஸ் 2 படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவுகள்: பிட்டர், எலக்ட்ரீசியன், வயர்மேன், வெல்டர் (கேஸ் மற்றும் எலக்ட்ரிக்), மிஷினிஸ்ட், டர்னர், கார்பென்டர், பிளம்பர், மேசன், மெக்கானிக் டீசல், மெக்கானிக் ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர்கண்டிஷனிங், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட், சர்வேயர், டிராப்ட்ஸ்மேன் (சிவில்), சிஎன்ஆர் புரோகிராமர் மற்றும் ஆபரேட்டர், செக்ரட்டரியல் அசிஸ்டென்ட், ஹெல்த் சேனிட்டரி இன்ஸ்பெக்டர், மெடிக்கல் லேபரட்டரி டெக்னீசியன் (பேத்தாலஜி), ஸ்ட்ரக்சுரல் வெல்டர், டிக்/மிக் வெல்டர், குவாலிட்டி அஷ்யூரன்ஸ் அசிஸ்டென்ட்.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பதாரர்கள் முதலில் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பின்னர் www.nfr.indianrailways.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.08.2026.



