Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பவர்கிரிட் நிறுவனத்தில் 668 இடங்கள்

டிப்ளமோ/ஐடிஐ/சிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பொதுத்துறை மின்பகிர்மான கழகமான பவர்கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள 668 இடங்களுக்கு ஐடிஐ/சிஏ/டிப்ளமோ இன்ஜினியரிங் படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: டிப்ளமோ டிரெய்னி/ஆபீசர் டிரெய்னி/ ஜூனியர் டெக்னீசியன் டிரெய்னி: 668 இடங்கள்.

மண்டலம் வாரியாக காலியிடங்கள் விவரம்: கார்ப்பரேட் சென்டர்-21, கிழக்கு பகுதி- 2, கிழக்கு பகுதி-II-16, ஒடிசா புராஜக்ட்- 32, வடக்கு கிழக்கு பகுதி- 33, வடக்கு பகுதி-33, வடக்கு பகுதி-I- 92, ராஜஸ்தான் புராஜக்ட்- 42, வடக்கு பகுதி-II-50, வடக்கு பகுதி-III-45, தெற்குபகுதி-I-47, தெற்கு பகுதி- II-81, மேற்கு பகுதி-I-67, மேற்கு பகுதி- II-110, சென்ட்ரல் டிரான்ஸ்மிஷன் யுடிலிட்டி- 30/ டிப்ளமோ டிரெய்னி, ஆபீசர் டிரெய்னி பணிக்கு சம்பளம்: ரூ.24,000- ரூ.10,800. ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு ரூ.21,000- ரூ.72,000.

வயது: 11.05.2026 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி:

i)டிப்ளமோ டிரெய்னி: சிவில்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/பவர் சிஸ்டம்ஸ்/சர்வே இன்ஜினியரிங் ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.

ii) ஜூனியர் ஆபீசர் டிரெய்னி (ஹெச்ஆர்/எப் அண்ட் ஏ): ஹெச்ஆர் பிரிவுக்கு எம்பிஏ/பிபிஎம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எப் அண்ட் ஏ பிரிவுக்கு சிஏ/சிஎம்ஏ இன்டர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

iii)ஜூனியர் டெக்னீசியன் டிரெய்னி: சர்வேயர் டிரேடில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

கட்டணம்: டிப்ளமோ, ஜூனியர் டெக்னீசியன் டிரெய்னி பணிக்கு ரூ.100, ஜூனியர் ஆபீசர் டிரெய்னி பணிக்கு ரூ.200. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது.

ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், விண்ணப்பதாரரின் தொழில்நுட்ப தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

சென்னை, பெங்களூரு, கொச்சி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வில் டெக்னிக்கல் அறிவு, சூபர்வைசரி அப்டிடியூட், குவாண்டிடேட்டிவ் அப்டிடியூட், டேட்டா சவிஷியன்ஸி, நியூமெரிக்கல் ஏபிலிட்டி, வெர்பல் காம்ப்ரிஹென்சன் ஆகிய பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

எழுத்துத்தேர்வில் முக்கிய பாடத்திலிருந்து 100 மதிப்பெண்களுக்கும், பொது அறிவுக் கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கும் கேட்கப்படும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது மாதம் ரூ.27,500 உதவித் தொகையாக வழங்கப்படும்.

www.powergrid.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.05.2026.