Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நேபாளத்திற்கு நீளும் இந்தியாவின் உதவிக்கரம்: இதுவரை 60 டன் நிவாரணப் பொருட்கள் விநியோகம்!

டெல்லி: அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் நேபாளத்துக்கு உதவிகளை வழங்க உறுதியளித்துள்ள நிலையில், உதவிகளை விரைவாக வழங்கியதில் இந்தியா தனித்து நிற்கிறது.

இந்நிலையில், நேற்று இரவு 10 டன் மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் மூன்றாவது விமானம் காத்மாண்டுவிற்குப் புறப்பட்டுள்ளது. இந்த உதவிகளில் கையடக்க மின்னாக்கிகள், கண்ணியப் பெட்டிகள், உணவுப் பொட்டலங்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதை மீட்புப் பணிகளுக்காக மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் கள ஆய்வு (Recce) குழுவினர் அடங்கிய 11 பேர் கொண்ட குழுவும் இதில் இடம்பெற்றுள்ளது. நேபாளத்தில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி இரவு சுமார் 8.35 மணியளவில், இந்திய விமானப்படையின் C-130J ரக விமானம், 10 டன் மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரண உதவிப் பொருட்களுடன் நேபாளத்தை நோக்கிப் புறப்பட்டது. சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய இமயமலை நாடான நேபாளம் உயிரிழப்புகளை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 12 மணி நேரத்துக்கும் குறைவான காலத்திலேயே இந்த விமானம் புறப்பட்டது. முதல் தொகுதி நிவாரணப் பொருட்கள் அன்றிரவே காத்மாண்டுவைச் சென்றடைந்தன.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 27ம் தேதி 37.5 டன் எடையுள்ள உணவுப் பொட்டலங்கள், போர்வைகள், தற்காலிக கூடாரங்கள் (Shelters) மற்றும் சோலார் விளக்குகள் அடங்கிய அடுத்தகட்ட உதவிகள் நேபாள அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மூலம் விமானம் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிவாரணப் பொருட்களின் அளவு 60 டன்களாக அதிகரித்துள்ளது.