Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பேங்க் ஆப் பரோடாவில் 5 ஆயிரம் அப்ரன்டிஸ்

பயிற்சி: அப்ரன்டிஸ்ஷிப். மொத்த காலியிடங்கள்: 5000. தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள்: 199 (பொது-89, பொருளாதார பிற்பட்டோர்-19, ஒபிசி-53, எஸ்சி-37, எஸ்டி-1)

உதவித் தொகை: மாதம் ரூ.15 ஆயிரம்.

வயது: 01.05.2026 தேதியின்படி 20 முதல் 28க்குள். எஸ்சி/எஸ்டி/ஒபிசியினர்/மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: ஏதொவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.800/-. பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோர் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ரூ.600/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பொது அறிவு, நிதி அறிவு, குவாண்டிடெட்டிவ் அப்டிடியூட், ரீசனிங் அப்டிடியூட், கம்ப்யூட்டர் அறிவு, பொது ஆங்கிலம் ஆகிய பாடங்களிலிருந்து 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சென்னை, திருவள்ளூர், கோவை, மதுரை, நாமக்கல், திருச்சி, விருதுநகர், திருப்பூர், காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு, ேசலம், சிவகங்கை, நெல்லை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பரோடா வங்கி கிளைகளில் பயிற்சி வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் முதலில் தங்களது கல்வித்தகுதி பற்றிய விவரங்களை www.nats.education.gov.in மற்றும் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் www.bankofbaroda.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.06.2026.