1. டெக்னீசியன்: (எலக்ட்ரீசியன்): 350 இடங்கள் (பொது- 140, பொருளாதார பிற்பட்டோர்- 35, எஸ்சி-56, எஸ்டி-77, ஒபிசி-42). சம்பளம்: தினமும் ரூ.1583. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: எலக்ட்ரீசியன் டிரேடில் 2 வருட ஐடிஐ படிப்பை முடித்து என்சிவிடி/எஸ்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற ஐடிஐ யில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
2. அசிஸ்டென்ட் போர்மேன் (எலக்ட்ரிக்கல் டிரெய்னி): 150 இடங்கள். (பொது- 60, பொருளாதார பிற்பட்டோர்- 15, எஸ்சி-24, எஸ்டி-33, ஒபிசி-18). சம்பளம்: ரூ.47,330/-. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
சிபிடி எனப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் பொது அறிவு மற்றும் பணிக்குரிய தொழில்நுட்ப அறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.
கட்டணம்: ரூ.1000/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
www.mahanadicoal.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (28.05.2026).
