கால் பாதங்களில் வறட்சி, சொரசொரப்பு, வெடிப்பு போன்ற பிரச்சனைகள் பலருக்கும் இருக்கும். தினமும் கால்களை சுத்தமாக வைத்துக்கொள்வதுடன், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இயற்கையான ஃபுட் மாஸ்க்களைப் பயன்படுத்துவது பாதத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும். இதோ வீட்டிலேயே எளிமையாக செய்துகொள்ள சில பாத மாஸ்க்கள்.
* தேன் மற்றும் தயிர் மாஸ்க்: இரண்டு டீஸ்பூன் தயிருடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பாதத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இது வறண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்க உதவும்.
* அலோவேரா மற்றும் தேங்காய் எண்ணெய் மாஸ்க்: ஒரு டேபிள்ஸ்பூன் அலோவேரா ஜெல்லுடன் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்து பாதத்தில் தடவவும். இரவு நேரத்தில் பயன்படுத்தி காலுறைகள் அணிந்து தூங்கலாம். இது வறட்சி காரணமாக உண்டாகும் வெடிப்புகள், மற்றும் கால் மாசுகளை நீக்கும்.
* வாழைப்பழ மாஸ்க்: நன்றாகப் பழுத்த அரை வாழைப்பழத்தை மசித்து பாதத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். சருமத்தை மென்மையாக வைத்திருக்க இது உதவும்.
* ஓட்ஸ் மற்றும் தேன்மாஸ்க்: ஓட்ஸ் பொடி, தேன் மற்றும் சிறிதளவு தயிர் கலந்து பாதத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம். தேனில் இயற்கையான ப்ளீச்சிங் தன்மை இருப்பதால் பாதக் கருமைகளை நீக்கும். மேலும் ஓட்ஸ்பொடி இறந்த செல்களை அகற்றி பாதங்களை மென்மையாக்கும்.
* ஷியா பட்டர் மற்றும் தேங்காய் எண்ணெய் மாஸ்க்: இரண்டையும் சம அளவில் கலந்து இரவு முழுவதும் பாதத்தில் வைத்திருக்கலாம். குறிப்பாக அதிக வறட்சியுள்ள பாதங்களுக்கு இது
பயனுள்ளதாக இருக்கும்.
எந்த மாஸ்க் பயன்படுத்துவதற்கு முன்பும் வெதுவெதுப்பான நீரில் கால்களை சிறிது நேரம் ஊறவைப்பது கூடுதல் நன்மை தரும்.
- எஸ். ஆர்த்தி


