Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு 437 சிலை, கலைப்பொருட்கள் காவல்துறையால் மீட்பு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சட்டமன்றப் பேரவையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக்கோரிக்கையின் போது வேதாரண்யம் ஓ.எஸ்.மணியன் (அதிமுக) சிலைகள் மீட்பு குறித்து பேசினார். இதற்கு பதிலளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: உறுப்பினர் பேசுகின்ற போது இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு சிலைகள் எவ்வளவு மீட்கப்பட்டுள்ளது என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.

7.5.2021 முதல் 31.3.2025 வரையில் 236 உலோக சிலைகள் திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் மீட்கப்பட்டுள்ளது. அதுபோல் 98 கற்சிலைகள், 11 மரச்சிலைகள், 72 கலைப்பொருட்கள் உள்ளிட்ட மொத்தம் 437 சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் தமிழ்நாடு முதல்வரின் கையில் இருக்கின்ற காவல்துறை தான் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு மீட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.