பயிற்சி: I. டிரேடு அப்ரன்டிஸ்: பிட்டர், எலக்ட்ரீசியன், மிஷினிஸ்ட், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், எலக்ட்ரானிக் மெக்கானிக், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (பிரஷ்ஷர்), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (ஸ்கில்டு).
தகுதி: 1. காலியிடங்கள் ஏற்பட்டுள்ள டிரேடுகள்: பிட்டர்/மெக்கானிக்கல்/எலக்ட்ரீசியன்/மிஷினிஸ்ட்/இன்ஸ்ட்ருமென்ட் மற்றும் மெக்கானிக் பாடப்பிரிவுகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் 2 வருட ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். ஐடிஐ படிப்பானது என்சிவிடி அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.
2. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (பிரஷ்ஷர்): பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (ஸ்கில்டு): பிளஸ் 2 தேர்ச்சியுடன் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
II. டெக்னீசியன் அப்ரன்டிஸ்:
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகள்: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், சிவில், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்.
தகுதி: சம்பந்தப்பட்ட இன்ஜினியரிங் பாடத்தில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
III. கிராஜூவேட் அப்ரன்டிஸ்:
தகுதி: பி.ஏ.,/பி.காம்/பிஎஸ்சி/பிபிஏ ஆகிய ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். டிரேடு வாரியாக ஏற்பட்டுள்ள காலியிட விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: 28.02.2026 தேதியின்படி 18 முதல் 24க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படியும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு தொடர்பான விவரங்கள் இ. மெயிலில் தெரிவிக்கப்படும்.விண்ணப்பதாரர்கள் டிரேடு அப்ரன்டிஸ் பயிற்சிக்கு www.apprenticeshipindia.gov.in/என்ற இணையதளம் மூலமாகவும், டெக்னீசியன் அப்ரன்டிஸ் மற்றும் கிராஜூவேட் அப்ரன்டிஸ் பயிற்சிகளுக்கு www.nats.education.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:நாளை 26.03.2026.


