Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மெட்ரோ ரயில் கழகத்தில் 361 இடங்கள்

ஐடிஐ/டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு

பணியிடங்கள் விவரம்:

1. ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரானிக்ஸ்): 38 இடங்கள். வயது: 18 லிருந்து 28க்குள். சம்பளம்: ரூ.33,000- ரூ.1,00,000. தகுதி: எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்): 4 இடங்கள். வயது: 18 லிருந்து 28க்குள். சம்பளம்: ரூ.33,000- ரூ.1,00,000. தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடத்தில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. ஸ்டேஷன் கன்ட்ரோலர் மற்றும் டிரெய்ன் ஆபரேட்டர்: 89 இடங்கள். வயது: 18 லிருந்து 28க்குள். சம்பளம்: ரூ.33,000- ரூ.1,00,000. தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவதொரு பாடத்தில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. மெயின்டெய்னர் (எலக்ட்ரிக்கல்): 129 இடங்கள். வயது: 18 லிருந்து 25க்குள். சம்பளம்: ரூ.20,000- ரூ.60,000. தகுதி: எலக்ட்ரீசியன் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. மெயின்டெய்னர் (எலக்ட்ரானிக்்ஸ்): 101 இடங்கள். வயது: 18 லிருந்து 25க்குள். சம்பளம்: ரூ.20,000- ரூ.60,000. தகுதி: எலக்ட்ரானிக்ஸ் டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

29.04.2026 தேதியின்படி வயது வரம்பு கணக்கிடப்படும்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு, தொழிற்திறன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600/-. இதர பிரிவினருக்கு ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.gujaratmetrorail.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (28.05.2026.)