பணியிடங்கள் விவரம்:
1.மேனேஜர்- டிசி ஆபரேஷன்ஸ் -4
2. மேனேஜர்- இன்பர்மேஷன் செக்யூரிட்டி ஆபரேஷன்ஸ் -3
3.மேனேஜர்-டிபிஏ -5
4. மேனேஜர்- நெட்வொர்க் ஆபரேஷன்ஸ் -3
5. மேனேஜர்-அப்ளிகேஷன் டெவலப்பர் -3
6. மேனேஜர்-ஏபிஐ டெவலப்பர் -4
7. மேனேஜர்-டேட்டா அனலிசிஸ்ட் -3
8. மேனேஜர்- சார்ட்டர்ட் அக்கவுன்டென்ட் -10
9. சீனியர் மேனேஜர் கிரடிட் - 20
10. மேனேஜர் கிரடிட் -80
11. சீனியர் மேனேஜர் பைனான்ஸ் -20
12. மேனேஜர் பைனான்ஸ் -80
13. சீனியர் மேனேஜர் பைனான்சியல் அனலிசிஸ்ட் -10
14. மேனேஜர் பைனான்சியல் அனலிசிஸ்ட் -40
15. சீனியர் மேனேஜர்- மாடல் வேலிடேட்டர் -4
16. சீனியர் மேனேஜர்- ஐடி ரிஸ்க் மேனேஜ்மென்ட் -1
17. சீனியர் மேனேஜர் டேட்டா அனலிசிஸ்ட் -2
18. சீனியர் மேனேஜர் ரிஸ்க் மேனேஜ்மென்ட் -6
19. சீனியர் மேனேஜர் கிளைமேட் ரிஸ்க் -2
20. சீனியர் மேனேஜர் போரக்ஸ் டீலர் -4
21. சீனியர் மேனேஜர் போரக்ஸ் டீலர் (கிராஸ் கன்ட்ரி) -1
22. சீனியர் மேனேஜர்- டொமஸ்டிக் டீலர்- ருபி டெரிவேட்டிஸ் -1
23. சீனியர் மேனேஜர்-டொமஸ்டிக் டீலர் ஈகியூவிட்டி/எப்எப்எஸ் -1
24. சீனியர் மேனேஜர்-டொமஸ்டிக் டீலர்-என்எஸ்எல்ஆர் -1
25. சீனியர் மேனேஜர் டொமஸ்டிக் டீலர் எஸ்எல்ஆர் -2
26. மேனேஜர் வெல்த் மேனேஜ்மென்ட் -5
27. மேனேஜர் மனிதவளம் -10
28.மேனேஜர் மார்க்கெட்டிங் -10
29. அசிஸ்டென்ட் மேனேஜர் -10
30. அசிஸ்டென்ட் மேனேஜர்- சிவில் இன்ஜினியர் -4
31. அசிஸ்டென்ட் மேனேஜர் ஆர்க்கிடெக்ட் -1
சம்பளம்: ரூ.48,480- 85,920.
தகுதி: i) 1 முதல் 7 வரை: கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பொறியியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ.,/பி.டெக்., பட்டம் அல்லது பிசிஏ பட்டம் பெற்று தகவல் தொழில்நுட்பத்துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ii) பணி எண்: 8 தகுதி: சிஏ பட்டம் பெற்று ஒருவருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
iii) பணி எண்: 9 முதல் 14 வரை: தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் நிதி/வங்கி பிரிவில் எம்பிஏ அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சிஏ/சிஎப்ஏ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 2 வருட கள அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
iv) பணி எண்: 15 முதல் 19 வரை: தகுதி: சிஏ/சிஎப்ஏ/எம்சிஏ/ எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்/எம்எஸ்சி புள்ளியியல்/ எம்ஏ பொருளியல்/எம்பிஏ நிதி ஆகிய ஏதாவதொரு படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது ஐடி/இசிஇ பிஇ பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
v) பணி எண்: 20 முதல் 25 வரை: தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் நிதி/வங்கி பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்று போரக்ஸ் மற்றும் டிரேடு பைனான்ஸ் பிரிவில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
vi) பணி எண்: 26 முதல் 31 வரை: தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் மனிதவளம்/வெல்த் மேனேஜ்மென்ட்/மார்க்கெட்டிங் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி எண்: 30க்கு பி.இ., சிவில் பட்டமும், பணி எண்: 31க்கு பி.ஆர்க் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 23 முதல் 33க்குள் இருக்க வேண்டும்.
கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.1000/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.175/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் முக்கிய பாடப்பிரிவுகள் மற்றும் ரீசனிங், ஆங்கில அறிவு, பேங்கிங், தொழில் அறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் இ. மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி, வேலூர், கோவை, தஞ்சை, திருப்பூர், நாகர்கோவில் ஆகிய மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
www.indianbank.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.04.2026.



