Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

இந்திய அணுசக்தி கழகத்தில் 330 இடங்கள்

பணி: எக்சிக்யூட்டிவ் டிரெய்னி (கேட்-2026).

மொத்த காலியிடங்கள்: 330.

துறை வாரியாக காலியிடங்கள் விவரம்:

அ. மெக்கானிக்கல்: 125 இடங்கள் (பொது-48, பொருளாதார பிற்பட்டோர்-12, எஸ்சி-20, எஸ்டி-8, ஒபிசி-37).

ஆ. கெமிக்கல்: 40 இடங்கள். (பொது-15, பொருளாதார பிற்பட்டோர்-4, எஸ்சி-6, எஸ்டி-3, ஒபிசி-12).

இ. எலக்ட்ரிக்கல்: 65 இடங்கள் (பொது-25, பொருளாதார பிற்பட்டோர்-6, எஸ்சி-10, எஸ்டி-5, ஒபிசி-19),

ஈ. எலக்ட்ரானிக்ஸ்: 50 இடங்கள் (பொது-19, பொருளாதார பிற்பட்டோர்-5, எஸ்சி-8, எஸ்டி-3, ஒபிசி-15)

உ.இன்ஸ்ட்ருமென்டேஷன்: 15 இடங்கள் (பொது-6, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-2, எஸ்டி-2, ஒபிசி-4)

ஊ. சிவில்: 35 இடங்கள் (பொது-13, பொருளாதார பிற்பட்டோர்-3, எஸ்சி-6, எஸ்டி-3, ஒபிசி-10).

வயது: 30.04.2026 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: சம்பந்தப்பட்ட முக்கிய பொறியியல் பாடப்பிரிவுகள் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2024, 2025, 2026ம் ஆண்டுகளில் நடந்த கேட் தேர்வுகளில் நடந்த கேட் நுழைவுத் தேர்வுகள் ஏதாவது ஒன்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும். அப்போது மாதம் ரூ.74 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். பின்னர் நிரந்தர பணி வழங்கப்படும். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், தேதி உள்ளிட்ட விவரங்கள் இ.மெயிலில் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

கட்டணம்: பொது/ஒபிசி மற்றும் பொருளாதார பிற்பட்டோர் ஆகியோருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள்/முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.

www.npcil.careers.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (30.04.2026.)