ஸ்டாப் செலக்சன் தேர்வு அறிவிப்பு
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பணியின் பெயர் விவரம்
டிஇஓ/எம்டிஎஸ்/ஜூனியர் இன்ஜினியர்/எக்ஸாமினர்/கேன்டீன் அட்டெண்டென்ட்/மேனேஜர்/டெக்னீசியன்/டாக்சிடெர்மிஸ்ட்/போட்டோ அசிஸ்டென்ட்/ஆபீஸ் சூபரின்டெண்டென்ட்/அசிஸ்டென்ட்/கன்சர்வேட்டர்/ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்/மெடிக்கல் அட்டெண்டென்ட்/லைபரரி மற்றும் இன்பர்மேஷன் அசிஸ்டென்ட்/டெக்னிக்கல் சூபரின்டெண்டென்ட் (வீவிங்)/இன்ஜின் டிரைவர் (மாஸ்டர் கிரேடு-2)/பயர்மேன்/சிரங் ஆப் லஸ்கர்ஸ்/இன்ஜின் டிரைவர்-2/ லேபரட்டரி அட்டெண்டென்ட்/கேர்ள் கேடட் இன்ஸ்ட்டிரக்டர்/சீனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட்/டெக்னிக்கல் ஆபரேட்டர்/இன்ஸ்டிரக்டர்/ லைபரி அட்டெண்டென்ட்/ பார்ம் அசிஸ்டென்ட்/ஆயுர்வேதிக் பார்மசிஸ்ட்/ நர்சிங் ஆபீசர்/ வொர்க்ஷாப் அட்டெண்டென்ட்/மெக்கானிக்/கோர்ட் மாஸ்டர்/அக்கவுன்டென்ட்/ஸ்டெனோகிராபர்/ ஸ்டோர்ஸ் கிளார்க்/ ஸ்டோர் அட்டெண்டென்ட்/ சார்ஜ்மென்/ ஜூனியர் கெமிஸ்ட்/ சீனியர் போட்டோகிராபர்/கேர்டேக்கர்/டிராப்ட்ஸ்மேன்/ரேடியோ மெக்கானிக்/ சிவில் மோட்டார் டிரைவர்/டெக்ஸ்டைல் டிசைனர்/குக்/ஆபரேட்டர் (ஆர்டினரி கிரேடு)/ஸ்டோர்கீப்பர்/பெர்ட்டிலைசர் இன்ஸ்பெக்டர்/ சப்-டிவிஷனல் ஆபீசர்/ரேடியோகிராபர்/லைபரரி கிளார்க்/லேப் அசிஸ்டென்ட்/ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்/சப்-எடிட்டர்/புரூப் ரீடர்/ஹெல்த் வொர்க்கர்/லோயர் டிவிசன் கிளார்க்/அப்பர் டிவிசன் கிளார்க்/டென்டல் டெக்னீசியன்/ இசிஜி டெக்னீசியன்/ஆயா/ரிசர்ச் அசிஸ்டென்ட்/ஜூனியர் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்/வோகேஷனல் இன்ஸ்டிரக்டர்/டிரில்லிங் அசிஸ்டென்ட்/பார்மசிஸ்ட்.
சம்பளம்: 7வது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
வயது: 01.01.2026 தேதியின்படி 10ம் வகுப்பு அடிப்படையிலான பணிகளுக்கு 18 முதல் 25 வயதிற்குள்ளும், பிளஸ் 2 வகுப்பு அடிப்படையிலான பணிகளுக்கு 18 முதல் 27க்குள்ளும், டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு தகுதியிலான பணிகளுக்கு 18 முதல் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதி: 10/பிளஸ் 2/ஐடிஐ/டிப்ளமோ/ பட்டப்படிப்புடன் விண்ணப்பிக்கும் பணிக்குரிய தொழிற்நுட்ப கல்வித்தகுதி அல்லது பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பணி வாரியாக விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வித்தகுதி விவரம்/துறை வாரியாக ஏற்பட்டுள்ள காலியிட விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள்/எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைன் எழுத்துத் தேர்வு ஜூனில் நடைபெறும். எழுத்துத் தேர்வில் மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வில் பொது ஆங்கிலம், பொது அறிவு, குவாண்டிடேட்டிவ் அப்டிடியூட், ஜெனரல் இன்டலிஜென்ஸ் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.
சென்னை, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், புதுச்சேரி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.
www.ssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.05.2026.



