30 நாள் வகை லன்ச் பாக்ஸ்!
* எலுமிச்சை சாதம் வெள்ளரிக்காய்
செய்முறை: தாளிப்பில் மஞ்சள் தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து சாதத்துடன் கலக்கவும்.
Snack: வாழைப்பழம் நிலக்கடலை வெண்ணெய்.
செய்முறை: வாழைப்பழத்தை வட்டமாக நறுக்கி சிறிதளவு Peanut Butter தடவி பரிமாறவும்.
* தக்காளி சாதம்
செய்முறை: தக்காளி, வெங்காயம், மசாலா வதக்கி சாதத்துடன் கலக்கவும்.
Snack: ஆப்பிள் துண்டுகள் பாதாம்.
செய்முறை: ஆப்பிளை நறுக்கி 5-6 பாதாமுடன் கொடுக்கவும்.
* இட்லி சட்னி
செய்முறை: இட்லி மாவை ஆவியில் வேகவைத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
Snack: வறுத்த கொண்டைக்கடலை.
செய்முறை: வேகவைத்த கொண்டைக்கடலையை மிளகு, உப்பு சேர்த்து வறுக்கவும்.
* வெஜ் சாண்ட்விச்
செய்முறை: முழுகோதுமை பிரெட்டில் வெள்ளரி, தக்காளி, கேரட், பனீர் வைத்து Toast செய்யவும்.
Snack: தயிர் மாதுளை.
செய்முறை: குளிர்ந்த தயிரில் மாதுளை முத்துக்கள் சேர்க்கவும்.
* தேங்காய் சாதம்
செய்முறை: தேங்காய் துருவல், கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து சாதத்துடன் கலக்கவும்.
Snack: கேரட், வெள்ளரிக்காய் ஸ்டிக்ஸ்.
செய்முறை: நீளமாக நறுக்கி ஹம்மஸ் அல்லது தயிர் டிப்புடன் கொடுக்கவும்.
* வெஜ் உப்புமா
செய்முறை: ரவையை காய்கறிகளுடன் வதக்கி வேகவைக்கவும்.
Snack: ஓட்ஸ் எனர்ஜி பால்.
செய்முறை: ஓட்ஸ், பால், பேரீச்சம் பழம் சேர்த்து அரைக்கவும்.
* சப்பாத்தி மிக்ஸ் வெஜ்
செய்முறை: காய்கறிகளை லேசாக வதக்கி சப்பாத்தியுடன் பரிமாறவும்.
Snack: ஆரஞ்சுத் துண்டுகள்.
செய்முறை: தோல் நீக்கி சிறு துண்டு களாக கொடுக்கவும்.
* லெமன் ரைஸ்
செய்முறை: எலுமிச்சைச் சாறு, வேர்க்கடலை தாளித்து சாதத்துடன் கலக்கவும்.
Snack: சீஸ் க்யூப்ஸ் திராட்சை.
செய்முறை: சிறிய சீஸ் துண்டுகளுடன் திராட்சை சேர்க்கவும்.
* தயிர் திராட்சை சாதம்
செய்முறை: சாதத்தில் தயிர் திராட்சை, தாளிப்பு சேர்த்து கலக்கவும்.
Snack: வேகவைத்த முட்டை தக்காளி.
செய்முறை: முட்டையை வேகவைத்து தக்காளியுடன் பரிமாறவும்.
* காய்கறி நூடுல்ஸ்
செய்முறை: காய்கறிகளை வதக்கி நூடுல்ஸுடன் கலந்து சமைக்கவும்.
Snack: மிக்ஸ் நட்ஸ்.
செய்முறை: பாதாம், முந்திரி, உலர் திராட்சை கலந்து கொடுக்கவும்.
* தோசை சட்னி
செய்முறை: தோசை சுட்டு சட்னியுடன் பரிமாறவும்.
Snack: வெள்ளரிக்காய் துண்டுகள்.
செய்முறை: சிறிது மிளகு, உப்பு தூவி கொடுக்கலாம்.
* பீட்ரூட் சாதம்
செய்முறை: துருவிய பீட்ரூட்டை வதக்கி சாதத்துடன் கலக்கவும்.
Snack: வாழைப்பழ-பேரீச்சம் ஸ்மூத்தி.
செய்முறை: பால், வாழைப்பழம், பேரீச்சம் பழம் சேர்த்து அரைக்கவும்.
* இட்லி மிளகாய்ப்பொடி
செய்முறை: இட்லிக்கு நெய், மிளகாய்ப்பொடி சேர்த்து பரிமாறவும்.
Snack: பொரி பேல்.
செய்முறை: பொரி, வெங்காயம், தக்காளி, எலுமிச்சை சேர்த்து கலக்கவும்.
* முட்டை சாதம்
செய்முறை: முட்டைப் பொரியல் செய்து சாதத்துடன் கலக்கவும்.
Snack: பேரிக்காய்த் துண்டுகள்.
செய்முறை: நறுக்கி பரிமாறவும்.
* வெஜ் நூடுல்ஸ்
செய்முறை: காய்கறி, மிளகு சேர்த்து சமைக்கவும்.
Snack: ஹோம்மேட் ட்ரெயில் மிக்ஸ்.
செய்முறை: பாதாம், முந்திரி, வால்நட், உலர் திராட்சை கலந்து கொடுக்கவும்.
* தயிர் மாதுளை சாதம்
செய்முறை: மாதுளை சேர்த்து பரிமாறவும்.
Snack: வேகவைத்த சோளம்.
செய்முறை: சிறிது வெண்ணெய், மிளகு சேர்க்கவும்.
* பனீர் பராத்தா
செய்முறை: பனீர் பூரணம் வைத்து பராத்தா சுடவும்.
Snack: முழுகோதுமை கிராக்கர்ஸ் பனீர்.
* காய்கறி சாதம்
செய்முறை: கலவைக் காய்கறி சேர்த்து சாதம் செய்யவும்.
Snack: கிவி துண்டுகள்.
* தக்காளி இட்லி
செய்முறை: இட்லியை தக்காளி மசாலாவில் பிரட்டவும்.
Snack: பேரீச்சம் பழம் வால்நட்.
* ஸ்வீட் கார்ன் சாதம்
செய்முறை: வேகவைத்த சோளம் சேர்த்து சாதம் கிளறவும்.
Snack: இட்லி நிலக்கடலை சட்னி.
* சப்பாத்தி ரோல்
செய்முறை: காய்கறி பூரணம் வைத்து சுருட்டவும்.
Snack: பழச்சாலட்.
* பொங்கல்
செய்முறை: பாசிப்பருப்பு, அரிசி சேர்த்து நெய்யில் தாளிக்கவும்.
Snack: வேகவைத்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு.
வெஜ் புலாவ்
செய்முறை: பாஸ்மதி அரிசி, காய்கறி சேர்த்து வேகவைக்கவும்.
Snack: மோர்.
* உப்புமா
செய்முறை: ரவை, காய்கறி சேர்த்து சமைக்கவும்.
Snack: பேசன் சில்லா ரோல்.
* எலுமிச்சை சாதம்
செய்முறை: தாளிப்புடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து கலக்கவும்.
Snack: தர்பூசணி துண்டுகள்.
* காய்கறி பராத்தா
செய்முறை: காய்கறி பூரணம் வைத்து சுடவும்.
Snack: கடலை மிட்டாய்.
* தேங்காய் முந்திரி சாதம்
செய்முறை: தேங்காய், முந்திரி தாளித்து சாதத்தில் கலக்கவும்.
Snack: வறுத்த மகானா.
* வெஜ் கிச்சடி
செய்முறை: அரிசி, பருப்பு, காய்கறி சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்.
Snack: மினி ஸ்டஃப்டு பராத்தா.
* சாம்பார் சாதம்
செய்முறை: சாம்பாரை சாதத்துடன் கலந்து நெய் சேர்க்கவும்.
Snack: மாதுளை முத்துக்கள்.
* தயிர் சாதம்
செய்முறை: தயிர், தாளிப்பு, கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
Snack: வாழைப்பழ ஓட்ஸ் மஃபின்.
செய்முறை: ஓட்ஸ், வாழைப்பழம், பால் சேர்த்து மாவாக்கி பேக் செய்து பரிமாறவும்.
- ஹேமலதா வாசுதேவன்.