Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

30 நாள் வகை லன்ச் பாக்ஸ்!

* எலுமிச்சை சாதம் + வெள்ளரிக்காய்

செய்முறை: தாளிப்பில் மஞ்சள் தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து சாதத்துடன் கலக்கவும்.

Snack: வாழைப்பழம் + நிலக்கடலை வெண்ணெய்.

செய்முறை: வாழைப்பழத்தை வட்டமாக நறுக்கி சிறிதளவு Peanut Butter தடவி பரிமாறவும்.

* தக்காளி சாதம்

செய்முறை: தக்காளி, வெங்காயம், மசாலா வதக்கி சாதத்துடன் கலக்கவும்.

Snack: ஆப்பிள் துண்டுகள் + பாதாம்.

செய்முறை: ஆப்பிளை நறுக்கி 5-6 பாதாமுடன் கொடுக்கவும்.

* இட்லி + சட்னி

செய்முறை: இட்லி மாவை ஆவியில் வேகவைத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

Snack: வறுத்த கொண்டைக்கடலை.

செய்முறை: வேகவைத்த கொண்டைக்கடலையை மிளகு, உப்பு சேர்த்து வறுக்கவும்.

* வெஜ் சாண்ட்விச்

செய்முறை: முழுகோதுமை பிரெட்டில் வெள்ளரி, தக்காளி, கேரட், பனீர் வைத்து Toast செய்யவும்.

Snack: தயிர் + மாதுளை.

செய்முறை: குளிர்ந்த தயிரில் மாதுளை முத்துக்கள் சேர்க்கவும்.

* தேங்காய் சாதம்

செய்முறை: தேங்காய் துருவல், கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து சாதத்துடன் கலக்கவும்.

Snack: கேரட், வெள்ளரிக்காய் ஸ்டிக்ஸ்.

செய்முறை: நீளமாக நறுக்கி ஹம்மஸ் அல்லது தயிர் டிப்புடன் கொடுக்கவும்.

* வெஜ் உப்புமா

செய்முறை: ரவையை காய்கறிகளுடன் வதக்கி வேகவைக்கவும்.

Snack: ஓட்ஸ் எனர்ஜி பால்.

செய்முறை: ஓட்ஸ், பால், பேரீச்சம் பழம் சேர்த்து அரைக்கவும்.

* சப்பாத்தி + மிக்ஸ் வெஜ்

செய்முறை: காய்கறிகளை லேசாக வதக்கி சப்பாத்தியுடன் பரிமாறவும்.

Snack: ஆரஞ்சுத் துண்டுகள்.

செய்முறை: தோல் நீக்கி சிறு துண்டு களாக கொடுக்கவும்.

* லெமன் ரைஸ்

செய்முறை: எலுமிச்சைச் சாறு, வேர்க்கடலை தாளித்து சாதத்துடன் கலக்கவும்.

Snack: சீஸ் க்யூப்ஸ் + திராட்சை.

செய்முறை: சிறிய சீஸ் துண்டுகளுடன் திராட்சை சேர்க்கவும்.

* தயிர் + திராட்சை சாதம்

செய்முறை: சாதத்தில் தயிர் திராட்சை, தாளிப்பு சேர்த்து கலக்கவும்.

Snack: வேகவைத்த முட்டை + தக்காளி.

செய்முறை: முட்டையை வேகவைத்து தக்காளியுடன் பரிமாறவும்.

* காய்கறி நூடுல்ஸ்

செய்முறை: காய்கறிகளை வதக்கி நூடுல்ஸுடன் கலந்து சமைக்கவும்.

Snack: மிக்ஸ் நட்ஸ்.

செய்முறை: பாதாம், முந்திரி, உலர் திராட்சை கலந்து கொடுக்கவும்.

* தோசை + சட்னி

செய்முறை: தோசை சுட்டு சட்னியுடன் பரிமாறவும்.

Snack: வெள்ளரிக்காய் துண்டுகள்.

செய்முறை: சிறிது மிளகு, உப்பு தூவி கொடுக்கலாம்.

* பீட்ரூட் சாதம்

செய்முறை: துருவிய பீட்ரூட்டை வதக்கி சாதத்துடன் கலக்கவும்.

Snack: வாழைப்பழ-பேரீச்சம் ஸ்மூத்தி.

செய்முறை: பால், வாழைப்பழம், பேரீச்சம் பழம் சேர்த்து அரைக்கவும்.

* இட்லி + மிளகாய்ப்பொடி

செய்முறை: இட்லிக்கு நெய், மிளகாய்ப்பொடி சேர்த்து பரிமாறவும்.

Snack: பொரி பேல்.

செய்முறை: பொரி, வெங்காயம், தக்காளி, எலுமிச்சை சேர்த்து கலக்கவும்.

* முட்டை சாதம்

செய்முறை: முட்டைப் பொரியல் செய்து சாதத்துடன் கலக்கவும்.

Snack: பேரிக்காய்த் துண்டுகள்.

செய்முறை: நறுக்கி பரிமாறவும்.

* வெஜ் நூடுல்ஸ்

செய்முறை: காய்கறி, மிளகு சேர்த்து சமைக்கவும்.

Snack: ஹோம்மேட் ட்ரெயில் மிக்ஸ்.

செய்முறை: பாதாம், முந்திரி, வால்நட், உலர் திராட்சை கலந்து கொடுக்கவும்.

* தயிர் + மாதுளை சாதம்

செய்முறை: மாதுளை சேர்த்து பரிமாறவும்.

Snack: வேகவைத்த சோளம்.

செய்முறை: சிறிது வெண்ணெய், மிளகு சேர்க்கவும்.

* பனீர் பராத்தா

செய்முறை: பனீர் பூரணம் வைத்து பராத்தா சுடவும்.

Snack: முழுகோதுமை கிராக்கர்ஸ் + பனீர்.

* காய்கறி சாதம்

செய்முறை: கலவைக் காய்கறி சேர்த்து சாதம் செய்யவும்.

Snack: கிவி துண்டுகள்.

* தக்காளி இட்லி

செய்முறை: இட்லியை தக்காளி மசாலாவில் பிரட்டவும்.

Snack: பேரீச்சம் பழம் + வால்நட்.

* ஸ்வீட் கார்ன் சாதம்

செய்முறை: வேகவைத்த சோளம் சேர்த்து சாதம் கிளறவும்.

Snack: இட்லி + நிலக்கடலை சட்னி.

* சப்பாத்தி ரோல்

செய்முறை: காய்கறி பூரணம் வைத்து சுருட்டவும்.

Snack: பழச்சாலட்.

* பொங்கல்

செய்முறை: பாசிப்பருப்பு, அரிசி சேர்த்து நெய்யில் தாளிக்கவும்.

Snack: வேகவைத்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு.

வெஜ் புலாவ்

செய்முறை: பாஸ்மதி அரிசி, காய்கறி சேர்த்து வேகவைக்கவும்.

Snack: மோர்.

* உப்புமா

செய்முறை: ரவை, காய்கறி சேர்த்து சமைக்கவும்.

Snack: பேசன் சில்லா ரோல்.

* எலுமிச்சை சாதம்

செய்முறை: தாளிப்புடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து கலக்கவும்.

Snack: தர்பூசணி துண்டுகள்.

* காய்கறி பராத்தா

செய்முறை: காய்கறி பூரணம் வைத்து சுடவும்.

Snack: கடலை மிட்டாய்.

* தேங்காய் + முந்திரி சாதம்

செய்முறை: தேங்காய், முந்திரி தாளித்து சாதத்தில் கலக்கவும்.

Snack: வறுத்த மகானா.

* வெஜ் கிச்சடி

செய்முறை: அரிசி, பருப்பு, காய்கறி சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்.

Snack: மினி ஸ்டஃப்டு பராத்தா.

* சாம்பார் சாதம்

செய்முறை: சாம்பாரை சாதத்துடன் கலந்து நெய் சேர்க்கவும்.

Snack: மாதுளை முத்துக்கள்.

* தயிர் சாதம்

செய்முறை: தயிர், தாளிப்பு, கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

Snack: வாழைப்பழ ஓட்ஸ் மஃபின்.

செய்முறை: ஓட்ஸ், வாழைப்பழம், பால் சேர்த்து மாவாக்கி பேக் செய்து பரிமாறவும்.

- ஹேமலதா வாசுதேவன்.