உடல், மனம் பாதித்த நிலையில் தூக்கத்திலேயே உயிரி*ந்த 27 வயது பாலிவுட் நடிகை
மும்பை: இந்தி மற்றும் தென்னிந்திய படங்களில் நடித்து புகழ்பெற்ற இளம் நடிகை அனன்யா ராஜ் உடல்நலக் குறைவால் தூக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் திரை உலகில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த வளர்ந்து வரும் நடிகை அனன்யா ராஜ் (27), கடந்த 2016ம் ஆண்டில் வெளியான ‘7 ஹவர்ஸ் டு கோ’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பாலிவுட் படங்களை தாண்டி முன்னணி நிறுவனங்களின் இசை வீடியோக்களிலும், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உடல் மற்றும் மனரீதியான கடுமையான பாதிப்புகளுடன் போராடி வந்த இவர், நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்தார். இளம் வயதிலேயே நடிகை அனன்யா ராஜ் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.