பணி: மேனேஜ்மென்ட் டிரெய்னி (மைனிங்): 276 இடங்கள் (பொது-114, பொருளாதார பிற்பட்டோர்-27, எஸ்சி-41, எஸ்டி-20, ஒபிசி-74).
சம்பளம்: ரூ.60,000- ரூ.80,000.
வயது வரம்பு: 30.04.2026 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: குறைந்தது 60% மதிப்பெண்களுடன் மைனிங் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கேட்- 2025 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கேட் தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.1000/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
www.coalindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.06.2026.


