தேர்வு: ஒருங்கிணைந்த மேல்நிலைக்கல்வி அளவிலான தேர்வு- 2026.
1. லோயர் டிவிஷன் கிளார்க்/ஜூனியர் செக்ரட்டேரியட் அசிஸ்டென்ட். சம்பளம்: ரூ.19,500- ரூ.63,200. வயது: 07.10.2026 தேதியின்படி 18 முதல் 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்/டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (கிரேடு-ஏ): சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100. வயது: 07.10.2026 தேதியின்படி 18 முதல் 27க்குள்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த விதவைகள், விவாகரத்தானவர்களுக்கு 45 வயது வரையிலும், இதர பிரிவினருக்கு 35 வயது வரையிலும் தளர்வு அளிக்கப்படும்.
ஸ்டாப் செலக்ஷன் கமிஷனால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த ஹையர் செகண்டரி லெவல் தேர்வில் மூலம் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இந்தத் தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும்.
முதல்கட்டத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் இரண்டாம் கட்டத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், வேலூர், நெல்லை, கிருஷ்ணகிரி ஆகிய மையங்களில் முதற்கட்ட தேர்வு நடைபெறும்.
எழுத்துத்தேர்வில் ஆங்கில மொழி, ஜெனரல் இன்டலிஜென்ஸ், குவாண்டிடேட்டிவ் அப்டிடியூட், ஜெனரல் அவர்னெஸ் ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
எழுத்துத் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இ.மெயில் மூலம் தெரிவிக்கப்படும். எழுத்துத் தேர்வுக்கான விரிவான பாடத்திட்டம், உடற்தகுதி, உடற்திறன் தகுதி, மருத்துவத் தகுதி, டைப்ரைட்டிங் திறன் தேர்வு ஆகிய கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
www.ssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.10.2026.


