Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சுப்ரீம் கோர்ட்டில் 250 ஜூனியர் கோர்ட் அசிஸ்டென்ட்

பணி: ஜூனியர் கோர்ட் அசிஸ்டென்ட்: 250 இடங்கள்.

சம்பளம்: ரூ.25,400.

வயது: 01.09.2026 தேதியின்படி 18 முதல் 30க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்து ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் என்ற வேகத்தில் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.1,500. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.750/-. இதை யூகோ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரரின் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுத்துத் தேர்வு, டைப்பிங் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவர். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

எழுத்துத் தேர்வில் பொது அறிவு ரீசனிங் அப்டிடியூட் ஆகிய பாடங்களிலிருந்து ‘ஆப்ஜக்டிவ் டைப்’ கேள்விகள் கேட்கப்படும். விரிவாக விடையளிக்கும் தேர்வில் ஆங்கில திறமையை பரிசோதிக்கும் வகையில் கடிதம், கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுத வேண்டும்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய மையங்களில் நவ.20ம் தேதி தேர்வு நடைபெறும்.

www.sci.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.10.2026.