Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேசிய தகவல் தொடர்பு மையத்தில் 243 சயின்டிஸ்ட்கள்

துறைவாரியாக காலியிடங்கள் விவரம்:

1. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி: 168 இடங்கள் ( பொது-70, எஸ்சி-25, எஸ்டி-12, ஒபிசி-45, பொருளாதார பிற்பட்டோர்-16). தகுதி: எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்/கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் பி.இ.,/பி.டெக் பட்டம் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ்/எலக்ட்ரானிக்ஸ்/ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய பாடங்களில் எம்எஸ்சி/எம்சிஏ/எம்.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்: 25 இடங்கள் (பொது-13, எஸ்சி-3, எஸ்டி-1, ஒபிசி-6, பொருளாதார பிற்பட்டோர்-2). தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/ கம்யூனிகேஷன்/கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. டேட்டா சயின்ஸ் மற்றும் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்: 50 இடங்கள் (பொது-22, எஸ்சி-7, எஸ்டி-3, ஒபிசி-13, பொருளாதார பிற்பட்டோர்-5). தகுதி: நெட்வொர்க்கிங்/சைபர் லா/சாப்ட்வேர் சிஸ்டம்/நெட்வொர்க்கிங்/ சைபர் செக்யூரிட்டி ஆகிய பாடப்பிரிவுகளில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 31.03.2026 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500.

மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் கேட்-2024, கேட்-2025, கேட்-2026 ஆகிய தேர்வுகள் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கேட் தேர்வு மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பொது/பொருளாதார பிற்பட்டோர்/ஒபிசியினருக்கு ரூ.800. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

www.recruitment.nic.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.04.2026