Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கப்பல் கட்டும் தொழிற்சாலையில் 224 அப்ரன்டிஸ்

மகாராஷ்டிரா, கோவாவிலுள்ள கர்வார் கப்பல் கட்டும் தளத்தில் 8/10/ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு அப்ரன்டிஸ் பயிற்சிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டிரேடு வாரியாக காலியிடங்கள் விவரம்:

(கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரொகிராமிங் அசிஸ்டென்ட்-4, எலக்ட்ரீசியன்-17, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்- 16, பிட்டர்-24, ஐ அண்ட் சிடிஎஸ்எம்-7, இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்-5, மிஷினிஸ்ட்-7, மரைன் இன்ஜின் பிட்டர்-15, மெக்கானிக் (இன்ஸ்ட்ருமென்ட்)-5, மெக்கானிக் (எம்பெடட் சிஸ்டம் மற்றும் பிஐசி)-2, மெக்கானிக் (மோட்டார் வெஹிகிள்)-2, மெக்கானிக் டீசல்-12, மெக்கானிக் இன்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ்-9, மெக்கானிக் மெகாடிரானிக்ஸ்-11, மெக்கானிக் எம்டிஎம்-2, மெக்கானிக் ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏசி-6, ஆபரேட்டர் அட்வான்ஸ் மெஷின் டூல்-3, பெயின்டர் (ஜி)-7, எலக்ட்ரீசியன் (ஏர்கண்டிஷன்)-5, பைப் பிட்டர்-5, டெய்லர்-5, ஷீட் மெட்டல் வொர்க்கர்-4, ஷிப்ரைட் ஸ்டீல்-7, ஷிப்ரைட்வுட்-11, டிக்/மிக் வெல்டர்-5, வெல்டர் (ஜி அண்ட் இ)-11, கிரேன் ஆபரேட்டர் ஓவர்ஹெட் (எஸ்ஐ)-2, ரிக்கர்-5, ேபார்ஜர் மற்றும் ஹீட் டிரீட்டர்-5, மெக்கானிக் (ரேடார் மற்றும் ரேடியோ ஏர்கிராப்ட்)-5.

பயிற்சி: டிரேடு அப்ரன்டிஸ். பயிற்சி காலம்: ரிக்கர் போர்ஜர் மற்றும் ஹீட் டிரீட்டர் டிரேடுக்கு 2 வருடம், கிரேன் ஆபரேட்டர் ஓவர் ஹெட் (எஸ்ஐ) டிரேடுக்கு 15 மாதங்கள், இதர அனைத்து டிரேடுகளுக்கும் ஒரு வருடம்.

உதவித் தொகை: ரிக்கர்- ரூ.7,480, போர்ஜர் மற்றும் ஹீட் டிரேடர்- ரூ.9,020, கிரேன் ஆபரேட்டர்- ரூ.9,020, இதர டிரேடுகள்- ரூ.9,600.

வயது: ஷீட் மெட்டல் வொர்க்கர், வெல்டர், பெயின்டர் டிரேடுகளுக்கு குறைந்தது 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். இதர டிரேடுகளுக்கு 14 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 12.04.2027 தேதியின்படி கணக்கிடப்படும். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படியும் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: ரிக்கர் டிரேடுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிரேன் ஆபரேட்டர், போர்ஜர் மற்றும் ஹீட் டீரிட்டர் டிரேடுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதர டிரேடுகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ படித்திருக்க வேண்டும். 8,10, ஐடிஐ படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, மருத்துவ தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் பொது அறிவியல், கணிதம், பொது அறிவு ஆகிய பாடங்களிலிருந்து 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்ய வேண்டும். பின்னர் அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள நேவல்/டாக்யார்டு/கர்வார் லிங்க்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.11.2026.