Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

2026 சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி 200 தொகுதி இலக்கை வெல்ல வேண்டும்

*தூத்துக்குடி பாக முகவர்கள் செயலி விளக்க கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி : அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதி என்ற இலக்கை நாம் வென்றாக வேண்டும் என தூத்துக்குடி பாக முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ஓரணியில் தமிழ்நாடு என்ற அடிப்படையில் திமுக உறுப்பினர் சேர்க்கை தொடர்பான பாக முகவர்கள் செயலி விளக்க கூட்டம், தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்றது. மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார்.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறிய அறிவுரையின்படி கூட்டம் நடைபெறுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் என்பதால் அனைவரும் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து பணியாற்ற வேண்டும். திமுக என்றால் அது ஒரு குடும்ப பாச உணர்வோடு பழகும் கட்சி.

தங்களது பகுதியில் வரும் 1ம் தேதி முதல் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின்கீழ் உறுப்பினர் சேர்க்கையை முதலமைச்சர் தொடங்கி வைக்கும் நடைமுறையை அனைவரும் பின்பற்றி நாம் உறுப்பினர் சேர்க்கையை தொடர வேண்டும். தூத்துக்குடி தொகுதியில் ஒரு பகுதியில் ஆயிரம்பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் குறைந்தபட்சம் 300 பேரை உறுப்பினராக சேர்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும் குறைய கூடாது. கூடுதலாகத்தான் இருக்க வேண்டும்.

அதேபோல் வார்டு பகுதியில் உள்ள வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் இணைந்து அனைவருடைய இல்லத்திற்கு நேரில் சென்று உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். கடந்த காலத்தில் புதுப்பிக்காத உறுப்பினர்களையும் புதுப்பிக்க வேண்டும். திமுக ஆட்சியில் எல்லோருடைய இல்லத்திலும் ஒரு வகையில் நன்மைகள் கிடைத்திருக்கும்.

ஏதேனும் உதவி தேவை என்றால் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். ஒட்டுமொத்தமாக அனைத்து பகுதிகளிலும் ஓற்றுமையுடன் பணியாற்றி 2026ல் தேர்தலில் 200 தொகுதி என்ற இலக்கை நாம் வென்றாக வேண்டும். அதற்காக சபதம் ஏற்று பணியாற்றுங்கள். எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரத்திற்கு உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும், என்றார்.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், தொகுதி பொறுப்பாளரும், மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பாரகு, மாநில பொறியாளரணி துணை செயலாளர் அன்பழகன், மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அபிராமிநாதன், கவிதாதேவி,

ரமேஷ், சீனிவாசன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தர், கிறிஸ்டோபர் விஜயராஜ், ஜெயக்கனி, ரூபஸ் அமிர்தராஜ், ஆனந்தசேகர். முருகஇசக்கி, சாரதி, டைகர்வினோத், மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமார், பழனி, வட்ட செயலாளர்கள் பாலு (எ) பாலகுருசாமி, கதிரேசன், ரவீந்திரன், முனியசாமி, சுப்பையா, சேகர், செல்வராஜ்,

சுரேஷ் மகாராஜா, ராஜாமணி, மனோ, செந்தில்குமார், முத்துராஜா, டென்சிங், சிங்கராஜ், பொன்ராஜ், பொன்னுச்சாமி, பத்மாவதி, சதீஷ்குமார், லியோஜான்சன், மூக்கையா, ரவிச்சந்திரன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், பொன்னப்பன், வைதேகி, ஜாக்குலின்ஜெயா, விஜயலட்சுமி, ரெக்ஸ்லின், இசக்கிராஜா, நாகேஸ்வரி, ஜெயசீலி, கண்ணன், தெய்வேந்திரன், கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.