கேடிஎம் நிறுவனம், டியூக் 200 மோட்டார் சைக்கிளில் புதிய அத்லெடிக் நீல வண்ணத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் ஆரஞ்சு, கருப்பு மற்றும் சில்வர் வண்ணங்களிலும் கிடைக்கும். புதிய பைக்கில் அத்லெடிக் நீலமும் ஆரஞ்சும் இணைந்த கிராபிக்ஸ் இடம் பெற்றுள்ளது. இந்த பைக்கில் 199.5 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 25 எச்பி பவரையும் 19.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. ஷோரூம் விலை சுமார் ரூ.1.94 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
+


