Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

20 வயது இளம்பெண்ணுடன் 56 வயது பஸ் டிரைவர் டும்...டும்... ஏற்கனவே 2 திருமணம் செய்தவர்

துவரங்குறிச்சி: திருச்சியில் ஏற்கனவே இரண்டு திருமணம் செய்த 56 வயது அரசு பஸ் டிரைவர், தற்போது 20 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் சுல்தான் பாஷா (56). இவர், திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். துவரங்குறிச்சி பணிமனையிலிருந்து, சிவகங்கை மாவட்டம் வழியாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வரை செல்லும் அரசு பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் துவரங்குறிச்சிக்கு அருகே சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா கொண்டபாளையம் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் தினமும் இவரது பஸ்சில் சென்று வந்த நிலையில், மகள் வயதுடைய பெண் மீது காதல் வயப்பட்டு கடந்த மாதம் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து திருமணம் செய்த 20 வயது இளம்பெண்ணை தனது சொந்த ஊரான டோல்கேட் பகுதிக்கு அழைத்து சென்றார். தகவல் அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள், சுல்தான் பாஷா பணி புரியும் அரசு பணிமனைக்கு நேற்று முன்தினம் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பணிமனையில் இருந்து பஸ்கள் வெளியே செல்வதில் சிரமம் ஏற்பட்டது. தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இளம்பெண் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் நீங்கள் அனைவரும் அருகில் உள்ள சிவகங்கை மாவட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி பெண்ணின் உறவினர்களிடம் கூறியதை அடுத்து அவர்கள் பணிமனையை விட்டு சென்றனர். ஏற்கனவே 2 திருமணம் செய்த நிலையில் மகள் வயதான இளம்பெண்ணை 3வதாக 56வயது அரசு பஸ் டிரைவர் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.