Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் 195 அப்ரன்டிஸ்கள்

பயிற்சிகள் விவரம்:

1. கிராஜூவேட் அப்ரன்டிஸ்: 50 இடங்கள்.

தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/கம்யூனிகேஷன்/கெமிக்கல்/மெட்டலர்ஜிக்கல்/ஏரோநாட்டிக்கல்/ஏரோஸ்பேஸ்/சிவில் இன்ஜினியரிங் பாடங்களில் ஏதாவதொன்றில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. டிரேடு அப்ரன்டிஸ்: 115 இடங்கள்.

தகுதி: பிட்டர்/வெல்டர்/டர்னர்/மிஷினிஸ்ட்/மெக்கானிக் டீசல்/எலக்ட்ரானிக் மெக்கானிக்/எலக்ட்ரீசியன்/கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட்/டிராப்ட்ஸ்மேன் இன்ஜினியரிங் (மெக்கானிக்கல்) மற்றும் கிரைண்டர் ஆகிய பாடங்களில் ஏதாவதொன்றில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

3. டெக்னீசியன் அப்ரன்டிஸ்: 30 இடங்கள்.

தகுதி: எலக்ட்ரிக்கல்/மெக்கானிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/இன்ஸ்ட்ருமென்டேஷன்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/கெமிக்கல்/மெட்டலர்ஜிக்கல்/சேப்டி இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.

2022ம் ஆண்டிற்கு பின்னர் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியில் குறைந்தபட்சம் 70% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் படிப்பை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.

ஐடிஐ/டிப்ளமோ/பட்டப்படிப்புகளில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். தேவைப்படும் பட்சத்தில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு டிஆர்டிஓ விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும்.

ஐடிஐ படித்தவர்கள் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், டிப்ளமோ/டிகிரி படித்தவர்கள் www.nats.education.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் தங்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்து விட்டு, அதில் கொடுக்கப்பட்டுள்ள டிஆர்டிஓ நிறுவன இணையதள லிங்க்கை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.10.2026.