Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

ராணுவத்தில் 190 ‘ஸ்விட்ச் போர்டு ஆபரேட்டர்கள்

கோவாவில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ராணுவ சிக்னல் டிரெய்னிங் சென்டரில் சிவிலியன் ஸ்விட்ச் போர்டு ஆபரேட்டர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சிவிலியன் ஸ்விட்ச் போர்டு ஆபரேட்டர் (சிஎஸ்பிஓ): 190 இடங்கள் (பொது-94, எஸ்சி-22, எஸ்டி-12, ஒபிசி-43, பொருளாதார பிற்பட்டோர்-19). சம்பளம்: ரூ.21,700.

வயது: 31.05.2026 தேதியின்படி 18 முதல் 25க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பிரைவேட் போர்டு எக்சேஞ்ச் ஆபரேட்டர் பணியில் குறைந்தது 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், பணி அனுபவம், உடற்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இ.மெயில் மூலம் தெரிவிக்கப்படும்.

www.indianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2026