பணியிடங்கள் விவரம்:
1. சப்-இன்ஸ்பெக்டர் (டெல்லி போலீஸ் படை):
மொத்த இடங்கள்: 205. (ஆண்கள்). (திறந்தவெளி போட்டி-184, முன்னாள் ராணுவத்தினர்-21)
பெண்கள்: 112 இடங்கள். (திறந்தவெளி ேபாட்டி)
சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400.
2. சப்-இன்ஸ்பெக்டர் (ஒன்றிய ஆயுதப்படை)
மொத்த இடங்கள்: 1320 (ஆண்கள்-1173, பெண்கள்-147).
சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது: 01.08.2026 தேதியின்படி 20 லிருந்து 25க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
3. சப்- இன்ஸ்பெக்டர் (ஒன்றிய தொழிற்சாலை பாதுகாப்பு படை- தீயணைப்பு பிரிவு)
ஆண்கள்- 234 இடங்கள்.
வயது: 20 லிருந்து 30க்குள். தகுதி: இயற்பியல்/வேதியியல்/
கணிதம் ஆகிய ஏதாவதொரு ப ாடத்தில் பிஎஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி: (அனைத்து பணிகளுக்கும்) ஆண்கள்- குறைந்தபட்ச உயரம் 170 செ.மீ., (எஸ்டி பிரிவினருக்கு 162.5 செ.மீ). மார்பளவு 80 செ.மீ., இருக்க வேண்டும். 5 செ.மீ., விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். (எஸ்டி பிரிவினர் 154 செ.மீ. இருக்க வேண்டும்).
உடல் திறன் தகுதி: ஆண்கள் 1.6 கி.மீ., தூரத்தை 6.5 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். 3.65 மீட்டர் நீளம் தாண்ட வேண்டும். 1.2மீட்டர் உயரம் தாண்ட வேண்டும். 4.5 மீட்டர் குண்டு எறிய வேண்டும்.
பெண்கள்: 800 மீட்டர் தூரத்தை 4 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். 2.7 மீட்டர் நீளம் தாண்ட வேண்டும். 0.9 மீட்டர் உயரம் தாண்ட வேண்டும்.
எஸ்எஸ்சியால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத் தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும். முதற்கட்ட எழுத்துத் தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மையங்களில் முதல் கட்ட எழுத்துத் தேர்வு நடைபெறும்.
கட்டணம்: ரூ.100/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டியினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
www.ssc.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2026.


