நெல்லை: நெல்லையில் சபாநாயகர் அப்பாவு நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியலை இதற்கு முன்பும் திருத்தம் செய்துள்ளது என்றாலும், இப்போதைய திருத்தம் பாஜ ஆட்சிக்காலத்தில் பிரதமர் மோடி ஆசியோடு நடப்பது தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம் மூலம் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, சாமானிய மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. எனவேதான் இதை திமுக எதிர்க்கிறது. தேர்தல் முடிந்த பின் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் அடங்கிய 17சி விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ஆணையம் மறுக்கிறது. இது வாக்குகளை பாஜவுக்குச் சாதகமாக மாற்றிட செய்யும் ஏற்பாடாகும். 17 சி விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் ஏற்றும்போது ஒவ்வொரு வாக்குசாவடியிலும் எவ்வளவு ஓட்டு, பூத்களில் வாக்குப்பதிவு விபரங்களை அறிய முடியும். ஆனால் அதை ஆன்லைனில் தேர்தல் ஆணையம் ஏற்ற மறுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
+
Advertisement
