Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

16 வயது சிறுமி ஆந்திராவுக்கு கடத்தல்: இரண்டு பெண்டாட்டிக்காரர் கைது

வேலூர்: காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலை சேர்ந்தவர் பிரகாஷ் (31), லாரி டிரைவர். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் 5 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரகாசுக்கும் காட்பாடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 3 மாதங்களுக்கு முன் ஆந்திராவுக்கு கடத்தி சென்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் காட்பாடி போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இருவரும் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக காட்பாடி மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ஆந்திரா சென்று பிரகாஷை இன்று அதிகாலை கைது செய்து, சிறுமியை மீட்டு காட்பாடிக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்கு பிறகு வேலூர் கோர்ட்டில் பிரகாஷ் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.