திருவாரூர்: திருவாரூரில் கோட்டூர் அருகே ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 160 பவுண் தங்க நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது சென்றுள்ளனர், குறிப்பாக கோட்டூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர் கோவிந்தராஜ் இவர், தீபாவளிக்கு தனது மகளுக்கு சீர்வரிசை செய்வதற்காக பெங்களுருவில் உள்ள தனது ஒரு மகள் வீட்டிற்கு சென்றுள்ளார், பின்னர் விடு திரும்பிய பொது தனது வீட்டின் பீரோல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு, அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வீட்டில் பீரோவில் வைத்திருந்த 160 பவுண் தங்க நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடிக்க வந்தது தெரியவந்தது, இதையடுத்து கோவிந்தராஜ் கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஸ்குமார், அதேபோன்று திருத்துறை பூண்டி டிஎஸ்பி பவானி உள்ளிட்டோர் கொள்ளை நடந்த வீட்டில் நேரில் பார்வையிட்டு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக தீபாவளிக்கு சீர்வரிசை குடுக்க சென்ற நேரத்தில், ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 160 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது̣, குறிப்பாக கொள்ளையடித்த குற்றவாளிகளை பிடிக்க, டிஎஸ்பி தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.


