Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மதுபான கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்தால் மேலும் 150 ஊழியர்கள் சஸ்பெண்ட்!

டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்த மேலும் 150 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவது இருக்கக்கூடிய டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பணம் வசூலித்தல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் மொத்தம் 217 பணியாளர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க லஞ்ச ஒழிப்புத் துறையும், டாஸ்மாக் நிர்வாகமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதில் நேற்று மட்டும் 67 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 150 பணியாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய மண்டலங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட பின் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஊதிய உயர்வை சமீபத்தில் சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவித்தார். மேலும், டாஸ்மாக் கடை பராமரிப்பு உட்பட இதர செலவுகளுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் பணம் வழங்கும் என அமைச்சர் அறிவித்திருந்தார். ஊதிய உயர்வு அறிவித்த பின்னரும் பாட்டிலுக்கு ரூ. 10 பணம் வசூலிப்பது தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த பின்பும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.