கராச்சி: பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சகாய் என்ற இடத்தில் ரெகோ டிக் செம்பு மற்றும் தங்கச் சுரங்கத் திட்டம் நடைபெற்று வருகின்றது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு படையினர் தொழிலாளரக்ளை பாதுகாப்பாக வாகனங்களில் அழைத்து சென்று இறக்கிவிட்டனர். பின்னர் சுமார் 30க்கும் மேற்பட்ட காலி வாகனங்களுடன் பாதுகாப்பு படையினர் குவெட்டா திரும்பிக்கொண்டு இருந்தனர்.
அப்போது தீவிரவாதிகள் கும்பல் பாதுகாப்பு படையினரின் கான்வாயை மறைந்திருந்து தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் உடனடியாக செயல்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இருதரப்புக்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.



