Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலங்கை முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழப்பு!

கொழும்பு: இலங்கையின் கொழும்பு அருகே கழுதாரா மாவட்டத்தின் அங்குவார்வொட்டா பகுதியில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்தில் நேற்று மாலை திடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புத்துறையினர், தீயைக்கட்டுப்படுத்தி 51 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பரிதாபகமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயந்துள்ளது. மேலும் 9 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களின் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்து நடந்த நேரத்தில் முதியோர் இல்லத்தில் சுமார் 72 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.