உத்தரப் பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 11 பேர் உயிரி*ப்பு
உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர். மனோரி மின் நிலையத்திற்கு அருகிலுள்ள பிப்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்தது. உயிரிழந்தவர்கள் பிரியஞ்சலி (5), பிரவீன் சிங் (13), ஜான்வி (12), ஆதித்யா (12), ஆதித்யா (8), ரவி (8), அஞ்சு (32), ஜியான் சிங் (40), விக்ரம் சரோஜ் (35), அன்ஷ் (6) மற்றும் நானா (4) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.



