Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அசாம் துப்பாக்கி படையில் 117 இடங்கள்

10, பிளஸ்2, ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு

ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை ராணுவப் படைகளில் ஒன்றான அசாம் துப்பாக்கி படையில் 117 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இப் பணிகளுக்கு அசாம் துப்பாக்கி படையில் பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த அல்லது படுகாயம் அடைந்த வீரர்களின் வாரிசுகளிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ரைபிள்மேன். (பணியின் போது உயிரிழந்த அல்லது காயமடைந்த வாரிசுகளுக்கான பணி நியமன திட்டம்).

மொத்த காலியிடங்கள்: 117.

அ. ரைபிள்மேன்/ரைபிள்வுமன் ஜெனரல் டியூட்டி ( ஆண் மற்றும் பெண்): 95 இடங்கள்.

ஆ. வாரன்ட் ஆபீசர் சைபர் (ஆண்கள் மட்டும்): 6 இடங்கள்.

இ. ஹவில்தார் கிளார்க் (ஆண்கள் மற்றும் பெண்கள்): 3 இடங்கள்.

ஈ. ரைபிள்மேன் எலக்ட்ரிக்கல் பிட்டர் சிக்னல் (ஆண்கள் மட்டும்): 2 இடங்கள்.

உ. ரைபிள்மேன் லைன்மேன்: 1 இடம்,

ஊ. ரைபிள்மேன் ஆர்மரர் (ஆண்கள் மட்டும்): 2 இடங்கள்.

எ. ரைபிள்மேன் ரெகவரி வெஹிகிள் மெக்கானிக் (ஆண்கள் மட்டும்): 1 இடம்.

ஏ. ரைபிள்மேன் எலக்ட்ரீசியன் மெக்கானிக் வெஹிகிள் (ஆண்கள் மட்டும்): 1 இடம்.

ஐ. ரைபிள்மேன் மெட்டல்ஸ்மித் (ஆண்கள் மட்டும்): 1 இடம்.

ஒ. ரைபிள்மேன் மேசன் (ஆண்கள் மட்டும்): 2 இடங்கள்

ஓ. ரைபிள்மேன் ஸ்டோர்கீப்பர் டெக்னிக்கல் (எலக்ட்ரிக்கல் மெக்கானிக்கல் இன்ஜினியர்)(ஆண்கள் மட்டும்):

ஔ: ரைபிள்மேன் வெஹிகிள் மெக்கானிக்: (ஆண்கள் மட்டும்): 1 இடம்

க: ரைபிள்மேன் இன்ஜினியர் எக்கியூப்மென்ட் மெக்கானிக் (ஆண்கள் மட்டும்) 1 இடம். சம்பளம்: அசாம் ரைபிள்ஸ் விதிமுறைப்படி வழங்கப்படும்.

வயது: கிளார்க் பணிக்கு 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். இதர பணிகளுக்கு 18 முதல் 23க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி:

1.ரைபிள்மேன் மற்றும் வுமன் (ஜெனரல் டியூட்டி, ஸ்டோர் கீப்பர்) பணிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

2. சைபர், வாரன்ட் ஆபீசர், கிளார்க் பணிகளுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. இதர பணிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ படித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

கிளார்க் பணிக்கு ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் 162.5 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். இதர பிரிவைச் சேர்ந்த ஆண்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு சாதாரண நிலையில் 80 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். (எஸ்டி 150 செ.மீ).

அசாம் துப்பாக்கி படையால் நடத்தப்படும் ஆன்லைன் கம்ப்யூட்டர் பணித் திறன் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, உடல்திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த தேர்வு விவரங்கள் அனைத்தும் இ.மெயில் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

உடற்திறன் தேர்வில் ஆண்கள் 24 கி.மீ., தூரத்தை 12 நிமிடங்களிலும், பெண்கள் 16 கி.மீ., தூரத்தை 8½ நிமிடங்களிலும் ஓடி முடிக்க வேண்டும். உடற்தகுதித் தேர்வில் விண்ணப்பதாரரின் உயரம், உடல் எடை பரிசோதிக்கப்படும். இ்ந்தத் தேர்வுகள் தோராயமாக ஜூலை/ஆகஸ்டில் நடைபெறும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.assamrifles.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.05.2026.