ஐபிபிஎஸ் தேர்வு அறிவிப்பு
பணி: கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட்ஸ்.
மொத்த இடங்கள்: 11,403.
சம்பளம்: ரூ.24,050- ரூ.64,480.
வயது: 01.08.2026 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் காலியிடம் ஏற்பட்டுள்ள மாநிலத்தின் அலுவல் மொழியில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
ஐபிபிஎஸ் அமைப்பால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும். அக்டோபர்-2026ல் முதற்கட்ட எழுத்துத் தேர்வும், டிசம்பர்-2026ல் மெயின் எழுத்துத் தேர்வும் நடைபெறும்.
தமிழ்நாட்டில் முதற்கட்ட எழுத்துத் தேர்வு சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், காஞ்சிபுரம் ஆகிய மையங்களில் நடைபெறும்.
முதற்கட்ட தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் 2ம் கட்ட மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் மார்ச் 2027ல் பணியில் சேர வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு வரும் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.
எஸ்சி/எஸ்டி/ஒபிசி/ சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் அது பற்றி தெரிவிக்க வேண்டும். வங்கிகள் வாரியாக ஏற்பட்டுள்ள காலியிட விவரங்கள், காலியிடப் பகிர்வு, ஐபிபிஎஸ் தேர்வில் பங்கு பெறும் வங்கிகள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
கட்டணம்: எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.175/-. இதர பிரிவினருக்கு ரூ.850/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.ibps.in என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.08.2026.



