Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரயில்வேயில் 11,127 அசிஸ்டென்ட் லோகோ பைலட்கள்

பணி: அசிஸ்டென்ட் லோகோ பைலட்.

சம்பளம்: ரூ.19,900. வயது: 1.7.2026 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசியினருக்கு ரயில்வே விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிட்டர்/எலக்ட்ரீசியன்/இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்/ மில் ரைட்/ மெயின்டெனன்ஸ் மெக்கானிக்/எலக்ட்ரானிக்ஸ்/ரேடியோ மற்றும் டிவி மெக்கானிக்/வயர்மேன்/ டர்னர்/மிஷினிஸ்ட்/ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர்கண்டிஷனிங் ஆகிய ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ஆட்ேடாமொபைல் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் டிப்ளமோ/பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/பெண்கள்/ முன்னாள் ராணுவத்தினர்/ திருநங்கைகளுக்கு ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பதாரர்கள் சிபிடி எனப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, ஆன்லைன் வழி அப்டிடியூட் டெஸ்ட், மருத்துவத் தகுதித் தேர்வு,சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்துத் தேர்வில் கணிதம். மென்டல் ஏபிலிட்டி, ஜெனரல் சயின்ஸ், ஜெனரல் அவர்னெஸ் ஆகிய பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். 10ம் வகுப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விவரம் ஆகியவை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் கேள்விகள் கேட்கப்படும். இதில் ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்து தேர்வை எழுதலாம். எழுத்துத் தேர்வு பற்றிய விவரம் இ. கால் லெட்டர் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ளும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 2ம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.

www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க அவகாசம்: 15.05.2026 முதல் 14.06.2026 வரை.