Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிலக்கரி நிறுவனத்தில் 1055 போர்மேன், சர்வேயர்கள் வேலை

பணியிடங்கள் விவரம்:

1. மைனிங் சிர்தார் (டி அண்ட் எஸ்): 577 இடங்கள் (பொது-225, ஒபிசி-98, எஸ்சி-110, எஸ்டி-86, பொருளாதார பிற்பட்டோர்-58). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மைனிங் இன்ஜினியரிங் டிப்ளமோ தேர்ச்சியுடன் மைனிங் சிர்தார்ஷிப் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

2. டெபுடி சர்வேயர் டி அண்ட் சி- கிரேடு சி (மைனிங்): 43 இடங்கள் (பொது-18, ஒபிசி-7, எஸ்சி-8, எஸ்டி-6, பொருளாதார பிற்பட்டோர்-4). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மைனிங்/மைனிங் சர்வேயிங் படிப்பில் ஐடிஐ/டிப்ளமோ தேர்ச்சியுடன் சர்வேயர்ஸ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

3. அசிஸ்டென்ட் போர்மேன் (எலக்ட்ரிக்கல்): டெக்னிக்கல் மற்றும் சூபர்வைசிங்- கிரேடு-சி: 435 இடங்கள் (பொது-174, ஒபிசி-74, பொருளாதார பிற்பட்டோர்- 43, எஸ்சி-83, எஸ்டி-61).

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 08.04.2026 தேதியின்படி 18 லிருந்து 30க்குள் இருக்க வேண்டும்.. சம்பளம்: ரூ.47,330. கட்டணம்: ரூ.1,180. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பதாரர்கள் சிபிடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் ஒன்றிய அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் படிப்பை முடித்திருக்க வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களும் தேவையான அசல் சான்றுகளுடன் வேலிட் கேஸ் டெஸ்டிங் சர்ட்டிபிகேட், வேலிட் பர்ஸ்ட் எய்ட் சர்ட்டிபிகேட் வைத்திருக்க வேண்டும்.

https://secl-cil.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (14.05.2026).