Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கம்; ஒன்றிய பாஜ அரசை கண்டித்து சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: 100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

கிராமப்புற மக்களின் குறைந்தபட்ச ஊதிய பாதுகாப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்கிற பெயரை பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா என்று பெயர் மாற்றம் செய்திட நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஒன்றிய பாஜ அரசு மசோதாவை தாக்கல் செய்திருக்கிறது. இதிலிருந்து மகாத்மா காந்தியின் மீது பாஜ வைத்திருக்கும் வன்மம் வெளிப்படுகிறது.

எனவே, 100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதை வன்மையாக கண்டிக்கும் வகையில் எனது தலைமையில், சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்களின் முன்னிலையில் நாளை (18ம்தேதி) வியாழக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு ஒன்றிய பாஜ அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியா கூட்டணி தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.