Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மேற்குவங்க பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி; காஸ் மானியம் ரூ.24க்கு பதில் 100 கோடி ரூபாய் டெபாசிட்: வங்கி கணக்கை முடக்கிய அதிகாரிகள்

கொல்கத்தா: மேற்கு வங்க பெண்ணுக்கு காஸ் மானியமாக ரூ.24க்கு பதில் ரூ.100 கோடி டெபாசிட் செய்யப்பட்டது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேற்குவங்க மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டம் குல்ட்டாலி என்ற பகுதியைச் சேர்ந்தவர் காஷ்மீரா ஷேக்(36). பைகள் தைக்கும் தனது கணவருக்கு உதவியாக ஐரி எப்பிராய்டரி வேலை செய்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவர் பிஎன்பி வங்கியின் குல்தாலி ஜம்தலா கிளையில் வங்கிக்கணக்கு வைத்துள்ளார். ஆஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட வீட்டில் வசிக்கும் அவர் தனது வங்கிக் கணக்கில் காஸ் சிலிண்டர் மானியம் வந்து சேர்ந்துவிட்டதா என அறிய விரும்பினார்.

எனவே தனது வங்கிக் கணக்கு இருக்கும் வங்கிக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை சரிபார்க்குமாறு ஊழியரிடம் கேட்டுள்ளார். அவரும் சரிபார்த்த போது காஷ்மீரா கணக்கில் ரூ. 99,99,99,997 இருந்துள்ளது. அதாவது 100 கோடி ரூபாய்க்கு 3 ரூபாய் குறைவாகும். இதையறிந்த வங்கி உயரதிகாரிகள் உடனடியாக அவரின் வங்கி கணக்கை முடக்கினர். மேலும் தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ள அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர். இது சர்வர் கோளாறு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.