டிரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம், ஸ்டிரீட் டிபிபிள் 765 ஆர்எக்ஸ் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 765 சிசி லிக்விட் கூல்டு இன்லைன் டிரிபில் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 12,000 ஆர்பிஎம்-ல் 130 எச்பி பவரையும், 9,500 ஆர்பிஎம்-ல் 80 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. முன்புறம் 41 எம்எம் ஓஹ்லின் என்ஐஎக்ஸ் 30 சஸ்பென்ஷன், பின்புறம் ஓஹ்லின் எஸ்டிஎக்ஸ்40 மோனோ ஷாக் அப்சர்வர்கள் உள்ளன. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் இருபுறமும் இயங்கும் குயிக் ஷிப்டர்கள் ஸ்டாண்டர்டு அம்சமாக இடம் பெற்றுள்ளது. நடப்பு 2026ம் ஆண்டு இறுதி வரை மட்டுமே இந்த பைக் உற்பத்தி செய்யப்படும் என நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.13.91 லட்சம்.
+


