சென்னை: குதிரை பேர புகார் தொடர்பாக ஆளுநர் அர்லேகரை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவித்தார். அப்போது, அமைச்சர் ராஜ்மோகனின் பேச்சு சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக விமர்சித்தார். தவெக அமைச்சர்கள் மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் காரணமாக அவர்கள் நிச்சயம் நீதிமன்ற வழக்குகளில் சிக்குவார்கள் என்றும் கூறினார். சினிமாவில் மிரட்டுவதைப் போல முதலமைச்சர் விஜய்யும், அவரது ஆதரவாளர்களும் மிரட்டிப் பார்க்க நினைப்பதாகக் குற்றம்சாட்டினார். பொருளாதார நிபுணர் கலையரசனைப் போலீசார் கைது செய்தது சட்டவிரோதமானது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். மேலும், தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களைவிட விலைவாசி உயர்வு அதிகமாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்
+
Advertisement


