பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளி வீரர்கள், வீராங்கனைகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இந்திய அணி 1968ம் ஆண்டு முதல் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வருகிறது. இதில் அதிகபட்சமாக டோக்கியோ பாரா ஒலிம்பிக்(2020) போட்டியில் 5தங்கம், 8 வெள்ளி, 6வெண்கலம் உட்பட 19 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது. அதற்கு முன்பு வரை அதிகபட்சமாக 4 பதக்கங்களை தான் இந்தியா வென்று இருந்தது.
ஆனால் இந்த முறை பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 5 தங்கம், 9வௌ்ளி, 10வெண்கலம் உட்பட 24பதக்கங்களை குவித்துள்ளது. இந்த பாரா ஒலிம்பிக் போட்டி நாளை மறுதினம் முடிவடைகிறது.
கூடவே சிம்ரன் நேற்று 100மீ(டி12) பந்தயத்தின் பைனலுக்கு முன்னேறி இருக்கிறார். அதனால் இந்த பதக்க எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளது.