பேட்டிங்கின்போது காயம் ஏற்படாத வகையில் கழுத்தை பாதுகாக்கும் உபகரணத்தை அனைத்து வீரர், வீராங்கனைகளும் அணிவதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கட்டாயமாக்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது கேமரூன் கிரீனுக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.