சென்னை: புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கான தடை ஓராண்டு நிறுத்தப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். 10 லட்சம் பேருக்கு 100 எம்பிபிஎஸ் இடங்களே அனுமதி என்ற ஆணைக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க விதித்த தடையை 2025-ம் ஆண்டிலும் செயல்படுத்தக் கூடாது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். மருத்துவ இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் உத்தரவை தேசிய மருத்துவ ஆணையம் ஓராண்டுக்கு நிறுத்திவைத்தது.