தூத்துக்குடி: தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டார். 4 நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட மாரிச்செல்வம், கார்த்திகா வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். கார்த்திகாவின் தந்தை முந்தூராமலிங்கத்தை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.