Thursday, February 22, 2024
Home » புதிய கல்லூரிக் கல்வி இயக்குநராக ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்மேகத்தினை நியமனம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு

புதிய கல்லூரிக் கல்வி இயக்குநராக ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்மேகத்தினை நியமனம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு

by Suresh

சென்னை: புதிய கல்லூரிக் கல்வி இயக்குநராக ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்மேகத்தினை நியமனம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளின் நிர்வாக செயல்பாடுகள் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கி வருகின்றன.

அதேபோல், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கல்லூரி கல்வி இயக்ககத்தின் இயக்குனராக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களில் மூத்த பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வந்தனர்.

அந்த வகையில், ஊட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஈஸ்வரமூர்த்தி கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் கல்லூரி கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார். இதற்கிடையில், பேராசிரியர் ஈஸ்வரமூர்த்தி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, கல்லூரி கல்வி இயக்குனராக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திரு.வி.க அரசு கலை கல்லூரி முதல்வர் கீதா நியமனம் செய்யப்பட்டார். பேராசிரியர் கீதா, கல்லூாி கல்வி இயக்குனராக முழு கூடுதல் பொறுப்பேற்று கவனித்து வந்தார்.

இந்த நிலையில், கல்லூரி கல்வி இயக்ககத்தின் புதிய இயக்குனராக, ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்மேகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, ஐ.ஏ.எஸ் (கேடர்) விதி, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கல்லூரி கல்வி இயக்ககத்தின் இயக்குனர் தற்காலிக இயக்குனராக ஓராண்டு பதவி வகிப்பதற்கு ஒப்புதல் வழங்குகிறது. அந்த வகையில், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், கல்லூரி கல்வி இயக்குனராக இடமாற்றம் செய்யப்படுகிறார். மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அளவிலான கல்லூரி கல்வி இயக்குனர் பணியிடம், சமூக நல இயக்குனர் பணியிடத்திற்கு ஒப்பானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பணியிடத்திற்கு பதிலாக, கமிஷனர் பணியிடம் உருவாக்கப்பட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, தற்போ பள்ளிக்கல்வித்துறை கமிஷனர் பணியிடம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

8 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi