காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் ஒரு வருட அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சி: கிராஜூவேட் அப்ரன்டிஸ்.
மொத்த காலியிடங்கள்: 500.
உதவித் தொகை: ரூ.9,000.
வயது வரம்பு: 01.06.2025 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகள், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் என அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி 01.06.2025 தேதியின்படி கணக்கிடப்படும்.
கட்டணம்: பொது/ஒபிசி யினருக்கு ரூ.800/-. பெண்கள்/எஸ்சி/எஸ்டியினருக்கு ரூ.600/-. மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.400/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பொது/நிதி அறிவு, பொது ஆங்கிலம், குவாண்டிடேட்டிவ் மற்றும் ரீசனிங் அப்டிடியூட், கம்ப்யூட்டர் அறிவு ஆகிய 4 தாள்கள் கொண்ட தேர்வு நடைபெறும்.விண்ணப்பதாரர்கள் www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் www.newindia.co.in என்ற இணையதளத்திற்கு சென்று அங்கு career opportunities பகுதியில் கொடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.06.2025.