புதுடெல்லி: ஒன்றிய உள்துறை செயலாளராக இருக்கும் அஜய்குமார் பல்லா பதவிக்காலம் ஆக.22ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய உள்துறை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி கோவிந்த் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஒன்றிய காலாச்சாரத்துறை செயலாளராக இருக்கும் அவர் உடனடியாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் சிறப்பு அதிகாரியாக இணைய உத்தரவிடப்பட்டுள்ளது. கோவிந்த் மோகன் ஐஏஎஸ் 1989ம் ஆண்டு சிக்கிம் கேடரை சேர்ந்த அதிகாரி ஆவார்.