சென்னை: தமிழ்நாட்டில் புதிய கட்சிகளை தொடங்குவது அவரவர்களது ஜனநாயக உரிமை என அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். பொதுப்பணித்துறை,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தென்மாவட்டங்களில் சாலை மற்றும் மேம்பால பணிகளை ஆய்வு செய்துவருகிறார். நேற்றைய தினம் தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர். இன்று மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டும்பணி,அப்பல்லோ சந்திப்பில் நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில்,
புதிய கட்சிகள் தொடங்குவது ஜனநாயக உரிமை: எ.வ.வேலு
தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கமல்ல என மதுரையில் அமைச்சர் எ.வ.வேலு பேட்டியளித்தார். நடிகர் விஜய்க்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார் என்றும் அவர் கூறினார். நாங்கள் யாரையும் கண்டு அஞ்ச மாட்டோம், பொறாமை கொள்ளமாட்டோம். மக்கள் ஏற்றுக்கொண்டால் தமிழக வெற்றிக் கழகத்தினர் தொடர்ந்து செயல்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நடிகர்கள் நாடளுவார்களா என்ற கேள்விக்கு, நான் 8 முறை தேர்தலில் நின்றிருக்கிறேன். 13 வயதில் ஒரு பொதுக்கூட்டத்தில் பெரியாரை பார்த்தேன். அந்த உணர்வோடு இன்று வரை செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். மக்களின் பிரச்சனைகளுக்கு நாம் எந்தளவு ஈடுகொடுக்கிறோமோ. அதற்கு தீர்வு காண எந்த அளவுக்கு முயற்சி செய்கிறோமோ அவர்களை மக்கள் ஆதரிப்பார்கள். விஜய்யை பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்..யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில், யாரையும் தடுக்க வேண்டும்யென்ற எண்ணம் திமுக விற்கு இல்லை என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
ரூ.515 கோடியில் 212 நெடுஞ்சாலை அமைக்கும் பணி
ரூ.515 கோடி மதிப்பில் 212 நெடுஞ்சாலைகள் 1,015 கிலோ மீட்டருக்கு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுரையில் அப்பல்லோ மேம்பால பணிகள் 30 சதவீதமும், கோரிப்பாளையம் மேம்பால பணிகள் 15% நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் அவசர கோலத்தில் மேம்பாலங்களை விதிமுறைகள் மீறி கட்டப்பட்டுள்ளன என தெரிவித்தார்.