புதுச்சேரி: புதுச்சேரி மாநில காவல்துறை டிஜிபியாக இருந்த சீனிவாஸ் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து டெல்லியில் பணியாற்றிய ஷாலினி சிங், புதுச்சேரி மாநில டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஷாலினி சிங் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி வந்தடைந்தார். நேற்று காலை புதுச்சேரி காவல் தலைமையகத்தில் ஷாலினி சிங் டிஜிபியாக பதவி ஏற்று கொண்டார்.
அவருக்கு புதுச்சேரி போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக காவல் தலைமையக அலுவலக வளாகத்தில் ஷாலினி சிங்கிற்கு, போலீசார் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. புதிய டிஜிபியாக பதவியேற்ற ஷாலினி சிங், மரியாதை நிமித்தமாக முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.